பயிற்சி செய்யக்கூடிய இடம் திறந்தவெளியாக, காற்றோட்டமான, சுத்தமான இடமாக இருக்க வேண்டும்.

வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு யோகா செய்யக்கூடாது. அப்படியே சாப்பிட்டால் மூன்று மணி நேரம் கடந்த பிறகே செய்ய வேண்டும்.

மலம், சிறுநீர் போன்றவை உடலில் தேங்கி இருக்கும்போது யோகா செய்யக்கூடாது.

பொதுவாக வாயால் மூச்சு விடுவதையும், மூச்சை உள் இழுப்பதையும் தவிர்க்க வேண்டும். மூக்காலேயே சுவாசிக்க வேண்டும். குறிப்பிட்ட சில ஆசனங்களுக்கு மட்டுமே வாயால் மூச்சு வாங்கி, விட வேண்டும்.

தரையில் துணி விரித்து அதன் மீதுதான் யோகா செய்ய வேண்டும்.

யோகா செய்யும்போது நன்கு நிமிர்ந்து நேராக இருக்க வேண்டும். கூனிட்டு உட்காருதல், உடலை குறுக்கி இருத்தல் போன்றவற்றை தவிர்க்கவும்.

நிதானமாகவும் மெதுவாகவும் யோகா செய்ய வேண்டும். அவசர அவசரமாக செய்யக் கூடாது.