நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கும் உணவுகள் !

'புரோபயாடிக்' எனும் நல்ல பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தயிர், புளித்த இட்லி மாவு, மோர் உட்பட பல்வேறு உணவுகளில் இயற்கையாகவே இவை உள்ளன.

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடும் போது, செரிமான மண்டலத்தில் உள்ள கோடிக்கணக்கான புரோபயாடிக் பாக்டீரியாக்கள் வளர்வதற்கான சூழல் உருவாகும்.

பழைய சோறு என்கிற நீராகாரத்தில் நிறைய நல்ல நுண்ணுயிர்கள் உள்ளன. 12 மணி நேரம் புளிக்க வைக்கப்பட்ட சோறில், சமைத்த சோறை விட 21 மடங்கு அதிகமாக இரும்புச் சத்து உள்ளது.

வாழைப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. அழற்சியை குறைத்து, வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்க உதவுகிறது.

ஆப்பிள்... ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி நிறைந்துள்ளது. செரிமானத்திற்கும், செல்களின் வளர்சிதை மாற்றத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது.

பார்லி / ஓட்ஸ்... இரண்டிலும் 'குளுக்கன்' உட்பட கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை, ஆரோக்கியமான பெருங்குடல் சுவர் மற்றும் பெருங்குடலை பாதுகாக்க உதவுகின்றன.