இளநரையை விரட்ட எளிமையான டிப்ஸ்…
இன்றைக்குப் பலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை இளநரை. இது உண்டாவதற்கு பரம்பரை காரணமும் இருக்கலாம்.
ஊட்டச்சத்துக் குறைபாடு, ஷாம்பூக்கள், கலரிங் பண்ணுவது, தண்ணீரில் கலந்துள்ள ரசாயனங்கள் போன்றவையும் இளநரை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
வைட்டமின் பி12, பி 3, கால்சியம், ஜிங்க் போன்ற தாதுக்கள் எல்லாமே கூந்தலின் நிறத்தை மாற்றும் தன்மை கொண்டவை. இவை நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
தினசரி உணவில் கறிவேப்பிலை துவையல், நெல்லிக்காய் சாறு, கரிசலாங்கண்ணியை தேனில் குழைத்து சாப்பிடுவது போன்றவை இளநரை மறைய உதவும்.
மருதாணியுடன் கறிவேப்பிலை, அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி போன்றவற்றைச் சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம்
தேங்காய் எண்ணெயில் மருதாணி, கருஞ்சீரகம், கறிவேப்பிலை, அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி போன்றவற்றைச் போட்டுக் காய்ச்சி, தலையில் பூசி வரலாம்.
நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து தலையில் நன்கு தேய்த்தால் உஷ்ணம் குறையும். மேலும் கூந்தலுக்கான ஊட்டம் கிடைக்கப்பெறுவதால் இளநரையின் தாக்கம் குறையும்.