எக் சில்லி... குட்டீஸ்களுக்கு அசத்தலான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் !

ஐந்து முட்டைகளை தண்ணீரில் வேக வைத்து, வெள்ளை கருவை மட்டும் தனியே எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

இதில், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு தலா 1 டீஸ்பூன் மற்றும் இரண்டு பச்சை மிளகாயை சேர்க்கவும்.

இதனுடன் சிறிது கடலைமாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் சீராக பொடி, கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை ஒரு பச்சை முட்டையுடன் சேர்த்து கலக்கவும்.

கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்தவுடன் மசாலாக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக போட்டு பக்கோடா போல் பொரித்தெடுக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், பொடியாக நறுக்கிய 2 டீஸ்பூன் பூண்டு சேர்த்து வதக்கவும். அதில், நீளவாக்கில் 3 கீறிய பச்சை மிளகாய், 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

ஒரிரு நிமிடங்களுக்கு பின் பொறித்தெடுத்த முட்டை பக்கோடாவையும் சேர்த்து கிளறவும்.

இதில், 1/2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், 3 டீஸ்பூன் தக்காளி கெட்ச்அப் உடன் சிறிது தண்ணீர் தெளித்து மிதமான தணலில் ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கினால் சூடான முட்டை சில்லி ரெடி.