பெண்களை தாக்கும் யுடிஐ... தடுக்கும் வழிமுறைகள் சில...
தோல் அல்லது மலக்குடலில் இருந்து வரும் பாக்டீரியாக்கள், சிறுநீர்க்குழாய்க்குள் நுழைந்து சிறுநீர் பாதையில் உள்ள உறுப்புகளை பாதிக்கும் போது சிறுநீர் பாதை நோய்தொற்று (யுடிஐ - Urinary Tract Infection) ஏற்படுகிறது.
சிறுநீர் வெளியேறும் பாதையில் எங்கு வேண்டுமானாலும் இந்த தொற்று ஏற்படலாம். பெண்கள், வயட் மற்றவர்களை விட யுடிஐ நோய்க்கு அதிகம் பாதிக்கப்படலாம்.
தினமும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
சிறுநீரை அடக்காதீர்கள். ஏனெனில் இது யுடிஐ பெறும் அபாயத்தை அதிகரிக்கும்.
சிறுநீர் கழிக்கும் போது அவசரப்பட வேண்டாம். ஏனெனில் இது உங்கள் சிறுநீர்ப்பை முழுவதுமாக வெளியேறுவதை தடுக்கிறது. இதனால் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும்.
உங்கள் பிறப்புறுப்பு பகுதியில் ஸ்ப்ரே அல்லது பவுடர் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்.
பெண்கள் குளியலறையைப் பயன்படுத்தும் போது முன்னும் பின்னும் துடைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிக்க எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.
முடிந்தால் பொது கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முயற்சிக்கவும்.
புரோபயாடிக் உணவுகளை உட்கொள்ளுங்கள். அவை யுடிஐக்களைத் தடுக்க உதவுகின்றன.