ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தாலும் அபாயம்!

குளூக்கோஸ் (சர்க்கரை) நீங்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து கிடைக்கிறது.

குளூக்கோஸ் உடலுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது உங்கள் மூளை ஆற்றலின் முதன்மை மூலமாகும்.

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு குறைந்தால் ஏற்படும் அறிகுறிகளை அறிவது அவசியம். ஹைபோகிளைசீமியா என்றும் அந்த நிலை அழைக்கப்படுகிறது.

ரத்த சர்க்கரை அளவு 70 மி.கி.,/டி.எல்., க்கு கீழே சென்றால்,மூளையின் செயல் திறன் பாதிக்கப்படும். நெஞ்சில் படபடப்பு, கை, கால்களில் நடுக்கம், அதிக வியர்வை, பசி, காணப்படும்.

கவனிக்காமல் விட்டுவிட்டால் சிலருக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. மயக்க நிலைக்கு (கோமா) ஏற்படவும், உயிரிழக்கும் அபாயமும் உண்டும் என கூறப்படுகிறது.

அதிக பாதிப்பு ஏற்பட்டால் நரம்பு வாயிலாக குளூக்கோஸ் ஏற்றிய பிறகு தான், இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள்.

சர்க்கரை குறைந்து விட்டதற்கான அறிகுறிகளைத் தெரிந்து கொண்டால், நான்கு கரண்டி சர்க்கரையை எடுத்துக் கொண்டால் போதுமானது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

எனவே, 'லோ சுகர்' அறிகுறிகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அலட்சியம் செய்யக்கூடாது.