மலச்சிக்கல் ஏற்பட மாறிவரும் உணவுப்பழக்கம் ஒரு மிக முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் மூன்றுவேளை உணவில் ஒருவேளை பழ உணவுகளாக அமையுமாறு எடுத்துக் கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
வயிறு சார்ந்த பெரும்பாலான பிரச்னைகளை போக்கும் தன்மை பப்பாளி பழத்திற்கு உண்டு.
ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது குடல் இயக்கத்தை ஊக்குவிக்க உதவுகிறது.
ஆரஞ்சு பழம் செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது. இதில் நார்ச்சத்தும் அதிகளவில் உள்ளது.
தர்பூசணி, முலாம் பழம், வெள்ளரிப்பழம் போன்ற நீர் சத்து பழங்கள் மலச்சிக்கல் பிரச்னை வராமல் காக்கும்.
வயிற்றைச் சுத்தம் செய்யும் திறன் இந்த கொய்யா பழத்தில் அதிகம் இருக்கிறது.
இரவு முழுக்க நீரில் ஊற வைத்த பேரீச்சம்பழத்தை மறுநாள் காலையில் சாப்பிடுவதன்மூலம் குடல் இயக்கத்திற்கு உதவும்.
திராட்சைப் பழங்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவதன்மூலம் மலச்சிக்கலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
சப்போட்டாவும் நார்ச்சத்து நிறைந்த ஒரு பழமாகும். இரவு தூங்கும் முன் ஒரு பழம் சாப்பிட்டால் காலையில் தாராளமாக மலம் வெளியேறும்.