கொளுத்தும் வெப்பத்திலும் வீடுகளை குளுகுளுவாக்க சில டிப்ஸ்…

சூரிய ஒளியின் மூலம், வெப்பம் வீட்டிற்குள் வருவதைத் தடுக்க, கடினமான காட்டன் துணியை ஜன்னல் மற்றும் கதவில் திரையாகத் தொங்க விடலாம்.

மேலும் அந்த காட்டன் துணியில் தண்ணீரில் நனைத்து, தொங்க விடலாம். இதனால், காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதுடன், ஒவ்வொரு அறையும் குளிர்ச்சியாக இருக்க உதவும்.

கொசுவலை பயன்படுத்தியிருக்கும் ஜன்னல்களில், தண்ணீரில் நனைத்த மெல்லிய துணி அல்லது லேசான காட்டன் துணிகளை திரையாக பயன்படுத்தலாம்.

பெரிய அகலமான வாளியில் தண்ணீர் நிரப்பி, அதை அறையின் மூலையில் வைப்பதால், அறை குளிர்ச்சியாகும்.

வீட்டின் மொட்டை மாடியில் படும் வெயிலைக் குறைக்க வெள்ளை டைல்ஸ் பதிக்கலாம். வீட்டுக்குள் இறங்கும் வெப்பத்தின் அளவை அது குறைக்கும்.

அல்லது வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கலாம். வெள்ளை நிறம் வெப்பத்தைக் கடத்தும் தன்மை அற்றது. அதனால் வீட்டுக்குள் வெப்பம் இறங்குவது குறையும்.

மாடியில் தோட்டம் போடுவது ஒரே கல்லில் இரண்டு பலனை கிடைக்க செய்யும். அதாவது வெயிலைச் செடிகள் உறிஞ்சுக் கொள்ளும், வீட்டுக்கு தேவையான காய்கனியும் கிடைக்கும்.

வீட்டுக்குள் வளர்க்கப்படும் உள் அலங்காரச் செடி வகைகளை வாங்கி அலங்கரிக்கலாம். இவையும் கோடைக்காலத்தில் குளிர்ச்சி தரக் கூடியவை.

தேவையற்ற மின்சாதங்களை தவிர்த்தல் அவற்றில் இருந்து வரும் வெப்பத்தை தவிர்க்கலாம். மின்சாரமும் சிக்கனமாகும். வீட்டின் வெப்ப அளவும் குறைக்கப்படும்.