ரம்ஜான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்யலாம் வாங்க !

சைவம் என்றால் காய்கறிகளில் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், கேரட், பச்சைப்பட்டாணி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். அசைவம் என்றால் மட்டன், சிக்கன் கொத்துக்கறியை பயன்படுத்தலாம்.

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் சிறிது நெய் ஊற்றி பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை தாளிக்கவும்.

பின், நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி, இஞ்சிப்பூண்டு விழுது, காரத்துக்கேற்ப பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். பின், புதினா, கொத்தமல்லி இலையை சேர்த்து தொக்கு பதத்தில் வதக்கவும்.

இப்போது காய்கறிகளையோ அல்லது மட்டன், சிக்கன் என விருப்பத்துக்கேற்ப சேர்த்து ஒரு சில நிமிடங்களுக்கு வதக்கவும். பின் 3/4 கப் பாசிப்பருப்பையும் சேர்த்து வதக்கவும்.

ஒரு கப் அரிசிக்கு ஆறுமடங்கு அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.

அரிசியை மிக்சி ஜாரில் அடித்து நொய் அரிசி பதத்துக்கு அரைத்து தண்ணீரில் 10 நிமிடங்களுக்கு ஊற விடவும். சிறிது நேரத்தில் பாசிப்பருப்பு நன்றாக வெந்தவுடன் அரிசியையும் சேர்த்து வேக விட வேண்டும்.

அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது பாத்திரத்திலுள்ள கஞ்சியை கிளறிவிடவும்.

நன்றாக வெந்தவுடன் சிறிதளவு நெய் மற்றும் கொத்த மல்லி இலையை சேர்த்தால் இப்போது டேஸ்டியான நோன்பு கஞ்சி ரெடி.

இதை அப்படியோவோ அல்லது கறிவேப்பிலை தொக்கு, கருவாடு, உருளைக்கிழங்கு மசாலா என எதையாவது சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.