நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் சிறந்ததா?
வெயில் கொளுத்த துவங்கினாலே உடலில் நீரேற்றத்தை தக்க வைக்க முதலில் தேடுவது இளநீரை தான்.
இதில் கார்போஹைட்ரேட், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
தினமும் காலையில் இளநீரை குடிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பது டாக்டர்களின் கருத்தாக உள்ளது.
அதேவேளையில், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர் குடிக்கலாமா? இதனால் பாதிப்பு ஏற்படுமா? என சந்தேகம் நிலவுகிறது.
நார்ச்சத்து மற்றும் புரதத்தின் சிறந்த ஆதாரமாக இளநீர் உள்ளது. இதில் மெதுவாக ஜீரணமாகும் தன்மை உள்ளதால், ரத்த சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கிறது.
எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக இளநீர் சாப்பிடலாம். ஆனால், ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இளநீரைக் குடிக்கக்கூடாது.
மிதமான அளவில் இளநீய் குடிப்பது உடலில் நீரேற்றம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
எனவே, தினமும் ஒரு கிளாஸ் அளவுக்கு மட்டுமே இளநீரை குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் ரத்த சர்க்கரை அளவில் மாறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதில், கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.