முந்திரி தரும் முத்தான நன்மைகள்...
முந்திரி சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பார்கள், இது தவறான கருத்து.
100 கிராம் முந்திரியில் 553 கலோரிகள் உள்ளன; செறிவூட்டப்பட்ட கொழுப்புகள் 75 சதவிகிதம் உள்ளன. இவை தவிர நார்ச்சத்தின் அளவும் அதிகம்.
முந்திரி, உடலின் வளர்சிதை மாற்றம் சீராக உதவுகிறது. அதனால் நாள் ஒன்றுக்கு 4-5 முந்திரி வரை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும்.
முந்திரியில் மக்னீசியத்தின் அளவு அதிகமாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
தசைப் பிடிப்பு, ஒற்றைத் தலைவலி, பதற்றம் மற்றும் மயக்கம் ஆகியவற்றையும் சரிசெய்யும். இதில் கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.
சருமம் மற்றும் கூந்தலின் நிறத்துக்குத் துணைபுரியும் மெலனினை உற்பத்திசெய்கிறது.
முந்திரி, மூளைக்குத் தேவையான ஆக்சிஜனை அனுப்பி, இவை சீராகச் சுரந்து மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.