10ம் வகுப்பு ரிசல்ட் : தோல்வியும் கடந்து போகும்... நிலையானது அல்ல..
தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் - 91.55%
கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரிப்பு. ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு அச்சம் காரணமாக ஆப்செண்ட் ஆகினர்.
குறைந்த மதிப்பெண், தோல்வி என்பதெல்லாம் நிலையல்ல. தோல்வியால் நம்பிக்கை இழந்த மாணவர்கள், பெற்றோர் தக்க ஆலோசனைக்கு எண். 104-ஐ அழைக்கலாம்.
பரீட்சை முடிவுகள் தொடர்பான உண்மையைச் செயல்படுத்தவும் ஏற்றுக்கொள்ளவும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் போதிய நேரத்தைக் கொடுக்க வேண்டும்.
முடிவுகளை அளவுகோலாக விவாதிப்பதைத் தவிர்க்கவும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்தால் மட்டுமே தான் நேசிக்கப்படுவதாகவும், மதிக்கப்படுவதாகவும் குழந்தை உணரக்கூடும்.
10ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும். தோல்வி அடைந்த மாணவர்கள் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கவும்.