வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகள் இதோ...!
வெந்தயத்தில், நீர், புரதம், கொழுப்பு, சோடியம், வைட்டமின் ஏ உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
வெந்தயம் ஊற வைத்த நீரைக் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வெந்தய நீரை குடித்தால், அஜீரண கோளாறில் இருந்து விடுபடலாம். செரிமான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இதிலுள்ள ஃபிளாவனாய்டுகள், உடலிலுள்ள எல்டிஎல் எனும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு தீர்வாகிறது.
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஊறவைத்த வெந்தய நீரை குடிப்பதால், ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
மோரில், வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட்டால், வாய்வு, வயிற்று பொருமல் நீங்கும். உடல் சூட்டை கட்டுப்படுத்தும்.