உப்பை அதிமாக சேர்ப்பதால்....!
இந்தியர்கள் தினமும் 9 - 11 கிராம் அளவுக்கு உப்பு எடுத்துக் கொள்கின்றனர்.
இது உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை அளவை விட இரு மடங்கு அதிகம் என ஆய்வு தெரிவித்துள்ளது.
உப்பு
அதிகம் பயன்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக
இந்தியாவில் ஆண்டுக்கு 1.75 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
மேலும் 22 கோடி பேர் இதய பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதற்கும் வழி வகுத்துள்ளது.
உப்பு பயன்பாட்டை குறைப்பது, இதய பிரச்னை, பக்கவாதம்
உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் என ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவில் அதிகப்படியான உப்பைச்
சேர்ப்பது டிமென்ஷியா, டைப் - 2 நீரிழிவு பாதிப்பு ஆகியவற்றை அதிகரிக்கும்
என ஆய்வுகள் கூறுகின்றன.
இன்னும் சில ஆய்வுகளில் அதிக உப்பு இரைப்பையிலுள்ள பாதுகாப்பு படலத்தை சேதமாக்குவதாகவும், புற்றுநோயை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளன.
உணவில் சேர்க்கப்பட வேண்டிய பாதுகாப்பான உப்பு அளவு என்ன என்பது குறித்துப் பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.