பப்பாளி பழத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது?
பழங்களை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது. இருப்பினும், ஒருசில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல என்பது நிபுணர்களின் அட்வைஸாகும்.
அதன்படி, வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிடக்கூடாது என கூறுகின்றனர். இதற்கான காரணங்களை பார்க்கலாம்.
செரிமானக் கோளாறு... பப்பாளியில் பப்பெய்ன் என்சைம்கள் அதிகளவில் உள்ளன. இதனால் வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதில் இயற்கையாகவே சர்க்கரை அதிகமுள்ளதால், வெறும் வயிற்றில் சாப்பிடும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவாக அதிகரிக்கும். எனவே, நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
பப்பாளி சாப்பிடுவது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். ஆனால் ஏற்கனவே சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், இதை தவிர்ப்பது நல்லது.
ஒவ்வாமை பிரச்னை இருப்பவர்கள் பப்பாளி சாப்பிடும் போது, எதிர்வினை ஏற்படலாம். இதனால் தும்மல், சுவாசிப்பதில் சிரமம், இருமல் மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
வெறும் வயிற்றில் பப்பாளியை மட்டும் சாப்பிடும்போது, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை முழுமையாக உறிஞ்ச வாய்ப்புள்ளதால், உடலின் திறன் குறையக்கூடும்.
பப்பாளியில் உள்ள லேடெக்ஸ் தன்மைகள் காரணமாக வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது அசவுகரியம் ஏற்படக்கூடும். குமட்டல், வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.