ஒவ்வொரு நாளையும் சரியான ஊட்டச்சத்துடன் தொடங்குவதற்குக் காலை நேரம் மிகவும் பொருத்தமானதாகும்.
6-7 பாதாமை முதல் நாள் இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் தோலை நீக்கி விட்டுச் சாப்பிட்டு வந்தால், முகப்பரு மற்றும் பிசிஓஎஸ் பிரச்னைகள் கட்டுக்குள் வரும்.
உலர் திராட்சையை 6-8 வரை எடுத்து ஊற வைத்து சாப்பிடும் போது, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மாதவிடாய் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
கருப்பு உலர் திராட்சையை முதல்நாள் இரவு ஊறவைத்து மறுநாள் சாப்பிடும் போது, முடி உதிர்தல் பிரச்னை கட்டுக்குள் வரும்.
இரண்டு வால்நட் பருப்பை இரவு ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால், நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.
இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பை முதல்நாள் தண்ணீரில் நனைத்த துணியில் கட்டி வைத்து, மறுநாள் காலையில் சாப்பிடும் போது, முடி வளர்ச்சி,தசை ஆரோக்கியம் பெறும்.
தினமும் இரண்டு அத்திப்பழங்களை ஊற வைத்துச் சாப்பிட்டால்,குடல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானோருக்கும் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கும்.