புரதச் சத்து நிறைந்த சாமையின் மருத்துவ பயன்கள் அறிவோமா !

சிறு தானியத்தில் ஒன்றான சாமையில் மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், துத்தநாகம் போன்ற பல முக்கிய தாதுகள் உள்ளன.

அதேபோல் வைட்டமின் சத்துகளில் பி காம்ப்ளெக்ஸ், மற்றும் தயாமின், ரிபோஃப்ளோவின், நயாசின், ஃபோலிக் அமிலம் ஆகியனவும் உள்ளன.

100 கிராம் சாமையில் 7.7 கிராம் புரதச்சத்து உள்ளது. இது உடல் வளர்ச்சி அடையவும் அதனுடன் எலும்புகள், தசைகள், சதைகள் வலுவுடன் இருப்பதற்கு உதவுகின்றன

சாமையில் இரும்புச்சத்தும் அதிகம். ரத்தசோகை வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். பெண்கள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

நெல்லரிசியை விட ஏழு மடங்கு நார்சத்து நிறைந்த தானியம் சாமை. நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்தவும், வராமல் தடுக்கவும் உதவும்.

100 கிராம் சாமையில் 7.6 கிராம் நார்ச்சத்தும் உள்ளது. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. மேலும் எடை குறைக்க விரும்புவோர் அதை அரிசிக்கு மாற்றாக எடுத்துக்கொள்ளலாம்.

சாமையில் செய்த உணவுகள் எல்லா வயதினருக்கும் ஏற்றவை. மிகச் சுலபமாக ஜீரணமாகும். இதை இட்லி, தோசை, பணியாரம், பொங்கல் என்று விதவிதமாக செய்து ருசிக்கலாம்.