மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாத உணவுகள் குறித்து அறிவோமா!
உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவதால், அதில் உள்ள சத்துகள் குறைந்து போய் விடும். அதுவே, உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்க கூடியதாக மாறி விடும்.
'மேலும், இது, 'புட் பாய்சனிங்'ல் துவங்கி, புற்று நோய் வர, வழி வகுத்து, உயிருக்கே ஆபத்தாகிவிடும் என, எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத, உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்...
சிக்கனை சூடுபடுத்தும்போது, இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும். மேலும் இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால், 'புட் பாய்சன்' ஆக மாற காரணமாக அமைந்து விடும்.
கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
அதிக புரோட்டீன் நிறைந்த உணவு, முட்டை. நன்றாக வேக வைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது, விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.
அரிசி சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, 'புட் பாய்சன்' ஆக மாறி விடும்.
சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கிவிட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, நச்சுத் தன்மை உள்ளதாக மாறி, வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.
எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதை திரும்ப திரும்ப சூடுபடுத்தினாலும் அதன் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிடும். இது, புற்றுநோய், இதய நோய்கள் ஏற்பட காரணமாகவும் அமையும்.