இரவு உணவுக்குப் பின் நடைபயிற்சி செய்வதால்...!

தினமும் இரவு உணவு சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

உடலை தளர்த்தி, அமைதியான தூக்கத்துக்கு வழிவகுக்கிறது.

உடலிலுள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதால், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது எளிய உடற்பயிற்சியாகும்.

கலோரிக்களை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

நடைப்பயிற்சியால் உடலில் நன்மையளிக்கும் எச்டிஎல் கொழுப்பு அதிகரிப்பதால், இதய நோய் தொடர்பான பாதிப்புகள் குறையக்கூடும்.