முல்லைப் பூவின் முத்தான பயன்கள்!!

முல்லைப் பூவின் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கும். இவை தலையில் சூடவது மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன.

முல்லைப் பூவின் சாறு பிழிந்து மூன்று துளி மூக்கில் விட்டால் தலைவலி தீரும்.

கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. முல்லைப் பூவின் சாற்றினை இரண்டு அல்லது நான்கு துளி வீதம் கண்ணில் விட்டு வந்தால் கண் பார்வை குறைவு குணமாகும்.

முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.

ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது.