சருமதிற்கு சிறந்த டானிக் வெள்ளரி!
வெள்ளரிக்காயை உண்ணுவதால், உடலில் ஏற்பட்டுள்ள வெப்பத்திற்கு நிவாரணம் கிடைக்கும்.
வெள்ளரிக்காயில் 90 சதவீததிற்கும் மேலாக நீர்ச்சத்து உள்ளது. எனவே உடலில் தங்கும் தீய நச்சுகளை வெளியேற்ற தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாப்பிடலாம்.
இதனால் தேவையில்லாத நச்சுகள் சிறு நீர் மூலம் வெளியேறும். உடலில் நச்சுகள் நீங்குவதால் உங்கள் சருமம் மெருகேறும்.
அதேப்போல் சருமத்தில் வெள்ளரிக்காயை தடவினால் பல நன்மைகள் ஏற்படும்.
குறிப்பாக சூரிய கதிர்களில் இருந்து வரும் புற ஊதா கதிர்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.
எனவே வெள்ளரிக்காயை கொண்டு நீங்கள் வீட்டிலேயே அழகியல் பொருட்களை தயாரிக்கலாம்.
அதை சருமத்தில் பயன்படுத்தும் போது பருக்கள், ப்ளாக்ஹெட்ஸ், சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
மேலும் கண்கள் சோர்வாகவும், கருவளையத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வெள்ளரிக்காய் அதை நீக்கி விடும்.