ஜிம்மிற்கு செல்லும் முன் சாப்பிடக்கூடிய 6 உணவுகள்!
வாழைப்பழத்தில் சர்க்கரை, ஸ்டார்ச் உள்ளிட்டவை உள்ளன. இது வழக்கமான உடற்பயிற்சிக்கு உடலுக்கு தேவையான எனர்ஜியை அளிக்கும்.
பீனட் பட்டர்... நிலக்கடலையில் இயற்கையாகவே புரதம் அதிகமுள்ளது. இது உடற்பயிற்சி செய்யும் போது, உங்களை முழுமையாக உணர வைக்கும்.
தயிரில் கால்சியம், புரதம் தவிர சிறியளவு இயற்கை சர்க்கரை உள்ளது. இது உடற்பயிற்சிக்கு முன்னர் உங்களை எனர்ஜியாக வைத்திருக்க உதவும்.
உலர் பழங்கள்... உலர் திராட்சை, பாதாம் மற்றும் பேரீச்சை போன்றவற்றை சரியான அளவில் எடுத்து கொள்ளலாம்.
கிரானோலா பார் அல்லது எனர்ஜி சாக்லேட்டுகளில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. உடற்பயிற்சி செய்வதற்கு முன், உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவும்.
எலும்பு மற்றும் தசை வலிமையை அதிகரிக்க புரத கலவை எடுத்து கொள்வது வழக்கமாக உள்ளது. இது உடற்பயிற்சிக்கு முன்னர் எனர்ஜியுடன் வைத்து கொள்ள உதவுகிறது.