பிரசவகால ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் போக சில டிப்ஸ்…
ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் எனும் தழும்புகள் பொதுவாக பிரசவித்த பெண்கள் மட்டுமல்லாமல், எடை அதிகரிப்பு காரணமாக இளம் வயதில் தொடை, கழுத்து, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் உருவாகிறது.
பிரசவத்துக்கு பிறகு வயிற்று, தொடை பகுதிகளில் காணப்படும் தழும்பை போக்க வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே எளிதில் எப்படி மறைய செய்வது என தெரிந்துக்கொள்ளலாம்.
சர்க்கரையுடன் சம அளவு பாதாம் எண்ணெய் எடுத்து இரண்டையும் ஒன்றாக கலக்கி தழும்புகள் உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் மெல்ல மெல்ல மறையும்.
சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் கற்றாழை செல்லை, குளித்த பின்னர் தழும்புகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் போகும்.
தேங்காய் எண்ணெயை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து பின்னர் தண்ணீரால் கழுவினால் தழும்புகள் மறையும்.
பிரசவ தழும்புகள் மற்றும் தசை விரிவு கோடுகளை விளக்கெண்ணெய் நீக்கும் தன்மை கொண்டது. தழும்புகள் உள்ள அடிவயிறு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் எளிதில் மறையும்.
கடுகு எண்ணெயை 100 கிராம் அளவில் இலேசாக சூடு படுத்தி, 5 டீஸ்பூன் அளவு மஞ்சள் தூளை சேர்த்து வயிற்றுபகுதியில் தொட்டு இலேசாக தேய்க்க வேண்டும். பின்னர் குளிக்கவும், நல்ல மாற்றம் தரும்.
கோகோபட்டரை குளிப்பதற்கு முன்பு வயிற்றில் தடவி 15 நிமிடங்களில் குளித்துவிடுங்கள். தழும்புகளை போக்கி சருமத்தை மேலும் பொலிவாக்கும்.