சுகர் ஃப்ரீ இனிப்புகள்... நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட ஏற்றதா?

நீரிழிவால் பாதிக்கப்பட்ட பலரும் இனிப்புப் பண்டங்களைச் சாப்பிட விரும்புவர். அவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டது தான் சுகர் ஃப்ரி இனிப்புகள்.

சாக்லேட், மிட்டாய் துவங்கி இனிப்புப் பண்டங்கள் வரை அனைத்திலும் சுகர் ஃப்ரீ வெர்ஷன்கள் வந்துவிட்டன.

சர்க்கரை போன்ற வேதியியல் பொருட்கள் மூலம் இந்த உணவுப்பொருட்களில் இனிப்புச்சுவை சேர்க்கப்படுகிறது.

இதனைச் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு மற்ற இனிப்புகள் சாப்பிடும்போது அதிகரிப்பது போல அவ்வளவாக அதிகரிக்காது.

ஆனால், இந்த சுகர் ஃப்ரீ இனிப்புகளிலும் சில ஆபத்துகள் உள்ளன.

இவற்றில் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால், இவற்றை அளவுக்கதிகமாகச் சாப்பிட்டால் உடற்பருமன் அதிகரிக்கும்.

மேலும், இனிப்புச் சுவைக்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் சில சமயம் நாள்பட்ட நோய்த்தாக்கம் கொண்ட முதியோர் சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

எனவே, சுகர் ஃப்ரீ என்பதற்காக இந்த இனிப்புகளை அதிகம் சாப்பிடாமல் குறைவாகச் சாப்பிடுவது நல்லது.