ஓய்வுக்குப் பின் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி? இதோ டிப்ஸ் !

தனியாக செல்வதை தவிர்த்து துணையுடன் பயணம் செய்யுங்கள். போக்குவரத்து நெரிசலான நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும்; அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

அதிக மொபைல் போன் பயன்பாடு அல்லது டி.வி., பார்ப்பதை தவிர்க்கவும். வெளியே செல்லும் போது, உங்கள் அடையாள அட்டையை எப்போதும் வைத்து கொள்ளுங்கள்.

அதிகமாக மருந்து உட்கொள்வதை தவிர்க்கவும். கூடுமானவரை கை வைத்தியத்தில் நலம் காண முயற்சிக்கலாம். தவிர்க்க முடியாதநிலையில் டாக்டரிடம் ஆலோசிக்க வேண்டும்.

எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். கடந்த காலத்தை பற்றிய யோசனை செய்ய வேண்டாம். இந்த கணம் தான் நிஜம். இந்த கணத்தை ஆனந்தமாக அனுபவியுங்கள்.

குளியலறை மற்றும் கழிப்பறையில் விழுந்து விடாமல் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் திறன் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்யுங்கள்.

ஓய்வுக்குப் பின் சில வருடங்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ளுங்கள். கூட்டம் அதிகம் உள்ள இடத்திற்கு செல்ல வேண்டாம்.

உங்களுக்கு அதிக ரத்த அழுத்தம் அல்லது இதயப் பிரச்னைகள் இருந்தால், தலைகீழாக நிற்கும் பயிற்சி (ஹெட்ஸ்டாண்ட்) மற்றும் மூச்சு பயிற்சி (கபாலபதி) செய்யாதீர்கள்.

துாங்க முடியாவிட்டால், மற்றவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். உடல்நிலை குறித்து தொடர்ந்து புகார் செய்யாதீர்கள்.

எப்போதும் முகத்தில் புன்னகையுடன், மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழுங்கள்.