பழுத்த தக்காளியை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் 9 நன்மைகள் !

தக்காளியிலுள்ள லைகோபீன் தன்மைகள் ரத்த அழுத்தத்தை சீராக்குவதால், உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிட முயற்சிக்கலாம்.

தக்காளி சாறு உடல் எடை, கொழுப்பை குறைக்க உதவுவதால் தினமும் உங்களின் டயட்டில் சேர்க்கலாம்.

டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்காளி சிறந்த சாய்ஸ். இது உடல் திசுக்களின் பாதிப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

இதிலுள்ள லைகோபீன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பச்சை தக்காளியை விட, பழுத்த தக்காளியில் இது அதிகளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வைட்டமின்கள் ஏ, கே மற்றும் சி, கார்போஹைட்ரேட், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்திருப்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தக்காளிச் சாறை முகத்தில் தடவிட சருமத்தை சுத்தப்படுத்தி பளபளப்பு தருகிறது.

தினமும் புகைபிடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய தக்காளி உதவுகிறது.

இதிலுள்ள கூமரிக் மற்றும் குளோரோஜெனிக் அமிலத்தின் தன்மைகள், சிகரெட் புகை மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இதிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் ஈ, பிற ஆக்ஸிஜனேற்றங்கள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.