பத்திய உணவுகளும் பத்தியத்திற்கு எதிரான உணவுகளும்!!
ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது, சில வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்; சிலவற்றை சேர்த்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுவர்.
அந்த வகையில், பொதுவான பத்திய உணவுகளையும், பத்தியத்திற்கு எதிரான உணவுகளையும் பார்க்கலாம்.
பத்தியத்திற்கு உகந்த உணவுகள் : கத்தரி பிஞ்சு, முருங்கை பிஞ்சு, வாழைக்காய் பிஞ்சு, அவரை பிஞ்சு, அத்தி பிஞ்சு, முளைக்கீரை
பத்தியத்திற்கு உகந்த உணவுகள் : சுண்டைக்காய் வற்றல், பொன்னாங்கண்ணி கீரை, புடலங்காய், பீர்க்கங்காய், நெய், பால், மோர், வெள்ளாட்டு மாமிசம்
செரிமான கோளாறுகள், செரிமான சக்தி குறைவாக உள்ளவர்கள், கீரை வகைகளை தவிர்ப்பது நல்லது. அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பூசணிக்காய் போன்றவை பத்தியத்திற்கு எதிரானவை.
சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தத்தை தரும் பாகற்காயை அடிக்கடி சாப்பிடக் கூடாது. சர்க்கரை கோளாறு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு நாள் சாப்பிட்டால் போதும்.
தேங்காய், மாங்காய், எள்ளு, கொள்ளு, மாவு பண்டங்கள், சுரைக்காய், கடுகு, நல்லெண்ணெய், கிழங்கு வகைகள், முட்டை, மீன், கருவாடு, மது, சிகரெட் ஆகியவை பத்தியத்திற்கு உகந்தவை அல்ல.
செரிமான சக்தியை துாண்டக்கூடிய திறன் கடுகிற்கு இருப்பதால், தினசரி சமையலில் தாளிப்பதற்கு பயன்படுத்தலாம். கஞ்சி தயாரிக்கும் போது, கடுகை தவிர்த்து மிளகு அல்லது சீரகம் தாளிக்கலாம்.