இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் பாதிப்புக்கு தீர்வுகள் சில …
நவீன வாழ்க்கை முறை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.
இவை இருந்தால் வயிற்றில் ஒருவித அசவுகர்ய உணர்வுடன் வலியும், மலம் கழிப்பதில் மாற்றமும் இருக்கும். மேலும் அடிக்கடி மலம் கழித்தல் அல்லது மலச்சிக்கல் இரண்டில் எதுவும் வரலாம்.
இதன் அறிகுறிகள் வயிற்று வலி, வயிற்று உப்புசம், உணவு உண்டவுடன் மலம் கழிக்க வேண்டும் எனும் உணர்வு, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் ஆகியனவாகும்.
முக்கிய தீர்வு உணவு பழக்கத்தில் மாற்றம் கொண்டு வருவது. நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிக அளவு உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கொழுப்பு உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். சிவப்பரிசி போன்ற முழு தானிய உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பால் பொருட்கள், டீ, காபி, கார்பனேட்டட் பானங்கள், கஃபைன் நிறைந்த பானங்களை தவிர்ப்பது நல்லது.
சமசீரான உணவை அளவாக சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்கவும்.
ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைக்குப் பழக வேண்டும். வாழ்வியல் மாற்றம் மற்றும் மன அமைதியே இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் நீங்க வழி செய்யும்.
மேலும் இந்த பாதிப்பு உள்ளவர்கள் புகைப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக ஆல்கஹாலுக்கு நோ சொல்ல வேண்டும்.