யோகர்ட்டில் கொட்டிக் கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள் !

பாலின் உப பொருளான யோகர்ட்டில் புரதம், கால்சியம், பி காம்பிளக்ஸ் வைட்டமின்கள் என பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

புரோபயாடிக் நிறைந்த யோகர்ட் சாப்பிடுவதால் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்; மலச்சிக்கலை போக்கும்.

இதிலுள்ள மெக்னீசியம், செலினியம் மற்றும் ஜிங் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

வீட்டில் தயாரிக்கப்பட்ட, இனிப்பில்லாத யோகர்ட்டை தொடர்ந்து உட்கொள்ள ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கக்கூடும். டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது உகந்தது.

இதிலுள்ள அதிக புரதச் சத்து வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதுடன், பசியை குறைக்கும். உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

பொதுவாகவே பால் பொருட்களில் கால்சியம் அதிகம். அதிலும் யோகர்ட்டை கால்சியம் பேக்டரி என்றே சொல்லலாம். எனவே இது எலும்புகளை வலுவாக்க சிறந்ததாக உள்ளது.

யோகர்ட்டில் உள்ள புரோபயாட்டிக்குகள் பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றை குறைத்து மனதை லேசாக்கும்.