ரத்த அழுத்த மாறுபாடு.. எப்படி சரிசெய்வது?
இதயத்தில் உள்ள இயற்கை மின் தாக்கம் காரணமாக உருவாகும் பல்ஸ் ரத்த நாளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
ரத்த அழுத்தம் 90/60mmHg - 120/80mmHg அளவுக்குள் இருக்க வேண்டும். இந்த அளவுக்குக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ ரத்தம் இதய நாளங்களில் அழுத்தப்பட்டால் இது பிரச்னையை உண்டாக்கும்.
இதய ரத்த நாளங்கள் வயதாக ஆக வலுவிழந்து இறுகத் துவங்கும். காலை தூங்கி எழுந்ததும் வயோதிகர்கள் சிலருக்கு ரத்த அழுத்தும் அதிகரிக்கும்.
மன அழுத்தம் இதற்கு ஓர் முக்கியக் காரணியாக உள்ளது. இதுதவிர புகை, மதுப்பழக்கம், அதீத எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவுகளைச் சாப்பிடுவது ஆகியனவும் காரணங்களாகும்
குறிப்பாக மசாலா, கொழுப்பு, எண்ணெய் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
புகை, மதுப் பழக்கங்களைக் கைவிட வேண்டும்.
காலையில் ஜாக்கிங், யோகா, உடற்பயிற்சி செய்தல் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.
உடற்பருமனானவர்கள் பலர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவர். எனவே அவர்கள் உடல் எடைக் கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.