இளம் வயதில் கழுத்து எலும்பு தேய்மானம்… அறிகுறியும் தீர்வும் இதோ...

எலும்பு தேய்மானம என்பது செர்விகல் ஸ்போண்டிலோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. கழுத்தில் உள்ள சவ்வும், எலும்புகளும் தேய்கிற ஒரு நிலை இது.

நவீன உலகில் மொபைல், லேப்டாப் பயன்படுத்துவது, வாகனங்கள் ஓட்டுவது ஆகிய காரணங்களால் 30 வயதிலேயே எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது.

இதன் முக்கிய அறிகுறி வலி தான். சிறிது காலம் கழித்து கழுத்தை அசைக்க முடியாமல் போகும். சிலருக்குக் கழுத்து வலி, தோள்பட்டை, நெஞ்சு வரை கூடப் பரவலாம்.

ஆரம்பக் கட்டத்திலேயே இதற்கான சிகிச்சை எடுத்தால் பாதிப்பை கட்டுப்படுத்த உதவும்.

பிசியோதெரபி மூலம் வலியை குறைக்க முடியும். தசைகளுக்கு வலுவூட்டுகிற பல பயிற்சிகள் உள்ளன.

உயரமான தலையணை வைத்துத் தூங்கினால் கழுத்து வலி வருவதாகக் கூறப்படுகிறது. சமதளமான தரையில் பாய் விரித்துத் தூங்குவதால் நல்ல பலன் பெறலாம்.

வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கால்சியம் நிறைந்த உணவுகள், குறிப்பாக பசும்பால், கீரை வகைகள், நட்ஸ், காய்கறிகள், பழங்களைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.