புற்றுநோய்க்கு எதிராகவும் இயங்கும் தக்காளி! பயன்கள் ஏராளம்!!

தக்காளி பழம் செம்பு சத்து, புரதம், கொழுப்பு சத்து, கால்சியம், இரும்புச்சத்து, சல்பர், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி12, பி3, சி, டி மற்றும் மாவுச்சத்தும் கொண்டது.

'இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் தக்காளிகளில், 'பிளாவனாயிட்ஸ்' என்ற வேதிப்பொருள் அதிகளவில் உள்ளது.

அந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், இதயநோயை குறைப்பதிலும், சில வகை புற்றுநோய்க்கு எதிராகவும் இயங்கும் ஆற்றல் பெற்றவை...' என, கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

தக்காளி ஜூஸ் குடித்தால், நம் தினசரி கால்சியம் தேவையில், 40 சதவீதம் கிடைக்கும். இது, களைப்பை போக்கும் சிறந்த பானமாக விளங்குகிறது.

கர்ப்பமான பெண்களின் ஆரம்ப கால வாந்தியை தடுக்கிறது. அஜீரணத்தை போக்குகிறது. தக்காளி பழச்சாறு அடிக்கடி எடுத்துக் கொண்டால், வயிற்றுப் புற்றுநோயை தவிர்க்கலாம்.

வயதானவர்களுக்கு ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள, ஆஸ்பிரின் மாத்திரை சிபாரிசு செய்வது வழக்கம். அதற்கு பதிலாக தினசரி, தக்காளி பழத்தை சாப்பிடுவது, நல்ல பலனைத் தரும்.

தக்காளி பழத்தில் நிறமற்ற மற்றும் வாசனையற்ற பிசுபிசுப்பான விதைகளில், ஆஸ்பிரினில் உள்ளதை போன்ற, ரத்த ஓட்டத்தை சீராக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.