டீ குடிக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்...!
காலையில் எழுந்தவுடன் பலருக்கும் டீ அருந்தாவிட்டால், அன்றைய நாள் அவ்வளவு சிறப்பான நாளாக இருக்காது.
டீ குடிக்கும் போது, சில உணவு பொருட்களை சேர்த்து உண்பதால், உடலுக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கிடைப்பதில் தடை ஏற்படலாம். எனவே தவிர்க்க வேண்டிய உணவுகளை பார்க்கலாம்...
பொரித்த உணவுகள்... ஒரே நேரத்தில் டீ மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை எடுத்துக் கொள்வது, அஜீரண கோளாறை ஏற்படுத்தக்கூடும்.
நட்ஸ் வகைகள்... இதில் பைடேட்டுகள் உள்ளன. இவை டீ அருந்தும் போது சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு இரும்பு சத்தை உறிஞ்சுவதை தடுக்கக்கூடும்.
இனிப்பான உணவுகள்... கேக், பிஸ்கட் மற்றும் சாக்லேட்டுகளில் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், டீ உடன் அருந்தும் போது ரத்தத்தில் சர்க்கரையில் அளவு திடீரென அதிகரிக்க கூடும்.
பீன்ஸ்... இதில் பைடேட்டுகள் உள்ளன. டீ அருந்தும் போது பீன்ஸ் சாப்பிட்டால் நம் உடலுக்கு இரும்பு சத்து கிடைப்பதை தடுக்கக்கூடும்.
டீ அருந்தும் போது, ஆரஞ்சு, லெமன் போன்ற சிட்ரஸ் பழ வகைகளை அறவே தவிர்க்க வேண்டும். லெமன் டீ அருந்தும் போது, வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து செரிமான கோளாறு ஏற்படலாம்.
மஞ்சள் கலந்துள்ள உணவுகள்... டீ அருந்தும் போது, மஞ்சளில் உள்ள குர்குமின் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை தடுக்கக்கூடும்.
பொதுவாக உணவு உட்கொண்ட அரை மணி நேரத்திற்கு பின் டீ அருந்தலாம். இதனால் டீயில் அதிகளவு உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களை முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.