பூண்டு சாப்பிட்டால் தொப்பை குறையுமா?

பூண்டில் கலோரிகளை எரிக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. அதேவேளையில் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக்கூடும். உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் செய்கிறது.

எனவே, தினமும் காலையில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டுகளை சாப்பிடும் போது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இதை சாப்பிடும்போது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துவதால், பசி உணர்வை தள்ளிப் போட உதவுகிறது.

ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் சார்பில் நடந்த ஆய்வில் இதன் தன்மைகள் கொழுப்பு எரிக்கப்படுவதை தூண்டப்படுவதாக கூறப்பட்டுள்ளது; நச்சுக்கழிவுகளை நீக்கும் முகவராகவும் உள்ளது.

எனவே, காலையில் எழுந்தவுடன் 2 அல்லது 3 பூண்டுகளை அப்படியே மென்று சாப்பிட்டு சிறிது தண்ணீரைக் குடிக்கலாம்.

இல்லாவிட்டால், வெதுவெதுபான தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் நறுக்கிய பூண்டுகளை சேர்த்து குடிக்கலாம். எலுமிச்சை சாறும் உடல் எடையை குறைக்க உதவக்கூடியதாகும்.

ஒரு சிலருக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். வயிறு மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இரைப்பை உணவுக்குழாய் பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்க்கலாம்.

எனவே, பூண்டை சாப்பிடும் முன் டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.