பீட்டா கரோட்டின் நிறைந்த தினை அரிசி... மளிகை லிஸ்டில் சேர்ப்போம்!
தினை அரிசியில் நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், கால்சியம், புரோடீன், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
இதை கொண்டு செய்யபட்ட உணவுகளை சாப்பிட்டு வருவதால் உடலின் தசைகள் நன்கு வலுபெறும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப் படும்.
குறிப்பாக தினையில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனை உண்பதால் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும்.
புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் நிறைய தினையில் உண்டு. பெண்கள் தினை சாப்பிடுவதால் மார்பக புற்றுநோய் அபாயம் குறையும்.
இதில் கால்சியம் சத்து அதிகமாகவே உண்டு. அதனால் இதை அடிக்கடி சேர்த்து வந்தால் எலும்புகள் வலிமையடையும். பற்கள் உறுதியாகும்.
மன அழுத்ததை குறைக்க கூடிய வேதி பொருட்கள் இதில் நிறைய உள்ளன பிபி உள்ளவர்கள் அதிகம் வாரம் இருமுறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவை சமநிலையில் வைக்கும். அதனால் டயட்டில் உள்ளவர்கள், அவர்களது மெனுவில் கண்டிப்பாக தினையை சேர்க்கவும்.
தினை கப நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. காய்ச்சல் சளி இருக்கும் போது இதில் கஞ்சி செய்து குடித்து வந்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.