புற்றுநோய் உடலில் ஏன், எப்படி உருவாகிறது?
இயல்பாகவே நம் உடம்பில், மூன்று முதல் ஐந்து நாட்களில் பழைய செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும்.
இதற்காக செல்கள் இரண்டாக பிரியும். புதிதாக உருவாகும் செல்கள் ஒரு நிலையில் கட்டுப்படுத்தப்படும்.
அவ்வாறு இல்லாமல், செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் பல்கி பெருகுவது புற்றுநோய் செல்களாக மாறுகிறது.
எளிதாக பரவும் தன்மை, அதன் மரபணுவில் உள்ளதால் விரைவாக பிற உறுப்புகளையும் பாதிக்கிறது.
மரபணு காரணமாகவும், வாழ்வியல் முறை, உண்ணும் உணவு, சுற்றுப்புறச்சூழல், புகை மற்றும் மது பழக்கம், உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை முக்கிய காரணிகள்.
வாய், தொண்டை புற்றுநோய், நுரையீரல், மலக்குடல், பெருங்குடல், மார்பக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்கள் இதனால் அதிகரித்து வருகின்றன.
புற்றுநோய் என உறுதிசெய்து விட்டால், உடனடியாக சிகிச்சையை தாமதிக்காமல் துவங்க வேண்டும்.
ஒவ்வொரு புற்றுநோய்க்கும், அதன் தன்மை, பாதிக்கப்பட்டவரின் செல்களின் தன்மை என, அனைத்திலும் வேறுபாடுகள் இருக்கும்.
முதலில் அச்சம் தவிர்த்து, தைரியமாக சிகிச்சைக்கு முன்வர வேண்டும். நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் மிகவும் அவசியம்.