ரத்த சோகை ஏற்பட காரணங்கள் என்ன? எப்படி சரி செய்யலாம்?

அன்றாட உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இல்லாமல் இருப்பது.

பெருங்குடலில் இருக்கும் நாடாப்புழு இரும்புச் சத்தை உறிஞ்சிக் கொள்வது.

சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச் சத்தை உடல் கிரகிக்க முடியாமல் போவது.

எலும்பு மஜ்ஜை பாதிப்பு, மாதவிடாய் கோளாறுகளால் அதிக ரத்தப் போக்கு போன்றவை முக்கிய காரணங்கள்.

வைட்டமின் பி12 குறைபாடு இருந்தாலும், ரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு வளராமல் ரத்த சோகை ஏற்படும்.

ரத்த சோகை இருப்பது, சாதாரண ரத்த பரிசோதனையின் மூலமே தெரிந்து விடும்.

ரத்த சோகைக்கான காரணத்தை தெரிந்து, டாக்டரின் ஆலோசனைப்படி, இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவில் அதிக இரும்புச் சத்துள்ள கீரை வகைகள், பழங்கள், முழு தானியங்களுடன் சேர்த்து, போதுமான அளவு புரதச் சத்துள்ள உணவையும் சாப்பிடுவது முக்கியம்.