உற்சாகம் தரும் ட்ரை ப்ரூட் ஜூஸ்.. ரெசிபி இதோ!
உடலின் ஆரோக்கியம் சமநிலையில் இருக்க உங்கள் காலை உணவு வேளையில் ட்ரை ப்ரூட் ஜூஸை எடுத்துக்கொள்ளலாம்.
இதில் இரும்புச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஈ மற்றும் பி, பொட்டாசியம், கால்சியம், தாமிரம், போன்றவை அதிகம் உள்ளன.
ஒரு நபருக்கு ஜூஸ் தயாரிக்கத் தேவையான பொருட்கள்: பாதாம் - 5, பிஸ்தா - 5, உலர் திராட்சை - 20, அத்திப்பழம் - 3, பேரீட்சை - 4
எப்படிச் செய்வது : முதல் நாள் இரவில் பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, அத்திப்பழம், பேரீட்சை அனைத்தையும் 200 மி.லி., தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் ஊறவைத்த பொருட்களை மிக்சி ஜாரில் நன்றாக அரைக்கவும். சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்; ஜூஸை வடிகட்ட வேண்டியதில்லை. வெறும் வயிற்றில் காபி, டீக்கு பதிலாக இதைக் குடிக்கலாம்.
இதிலுள்ள இரும்புச் சத்து கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மக்னீசியம் ரத்த அழுத்தத்தின் அளவை குறைக்கிறது. குறைந்த கலோரிகள்; ஆனால் புரதம் அதிகமாக உள்ளது.
மேலும், இதய நோய்க்கான பாதிப்பைக் குறைக்கிறது. கருப்பை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.