குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்!

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது பேரிக்காய். தினமும் சாப்பிட வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

வளரும் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் இரும்புச் சத்து பேரிக்காயில் நிறைந்துள்ளது. எனவே, அடிக்கடி சாப்பிட சிறுவர்களின் எலும்பு, பற்கள் வலுபெறக்கூடும்.

இதிலுள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

பேரிக்காயில் காப்பர் மற்றும் வைட்டமின் 'சி' நிறைந்துள்ளது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது.

குறைந்த கலோரி கொண்ட பேரிக்காய் உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது. மிகவும் சோர்வாக, ஆற்றல் இல்லாதது போல் உணரும்போது, பேரிக்காய் சாப்பிட, அதிலுள்ள குளுக்கோஸ் உடலுக்கு புத்துணர்ச்சி தரும்.

செரிமானம் எளிதாகி பசி தூண்டப்படும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு.

ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பினை அகற்றுகிறது. இதய படபடப்பு உள்ளவர்களுக்கு பேரிக்காய் மிகவும் நல்லது. உயர் ரத்த அழுத்தத்தைத் கட்டுப்படுத்தும் பேரிக்காயை தினமும் சாப்பிடலாம்.

நாள்பட்ட மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தால் அவதிப்படுவோர், இதன் சாறை குடித்து வந்தால், மூட்டு வீக்கம் குறையும்