வயிற்றில் பூச்சியை கட்டுப்படுத்த மருந்து சாப்பிட வேண்டுமா?

சுகாதாரமற்ற வாழ்க்கை முறை, மோசமான குடிநீர் காரணமாக உடலில் கிருமித்தொற்று ஏற்படுகிறது.

இதைத் தான் வயிற்றில் பூச்சி உள்ளது என்கிறோம். ஆண்டுக்கு ஒருமுறை அதற்காக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

மாறாக தேவைப்படும் போது 'டீவார்மிங்' மருந்து எடுத்தால் போதும் என அறிவுறுத்தப்படுகிறது.

குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே ஒரே நாளில் மருந்து எடுப்பது குறித்து டாக்டரின் ஆலோசனை பெறலாம்.

குழந்தைகள் மலத்தில் புழுக்கள் இருப்பது, ஆசனவாயில் அரிப்பு இருந்தால் மருந்து எடுத்துக் கொள்ளலாம்.

குடலின் மேற்பரப்பில் பரந்திருக்கின்ற பாக்டீரியா கிருமிகள் தான் இன்னொரு ஆபத்து.

சிறுகுடலில் பாதகம் தரும் கிருமிகள் அதிகமாகி, நல்லது செய்யும் கிருமிகள் குறைந்தால் 'புரோபயாடிக்' மருந்துகளை டாக்டர் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.