மழை சீசனில் குழந்தைகள் நலத்தை பேணுவது பற்றி அத்துறை டாக்டரின் ராஜாவின் வழிகாட்டல்

சீதோஷன நிலை மாறுவதால் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று மூலம் நோய் பரவும்

இன்புலுயன்சா வைரஸ், கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சலை ஏற்படுத்தும்

சுத்தமில்லாத சுற்றுப்புறம், தண்ணீரால் டைபாய்டு, காலரா ஏற்படும்

நன்றாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீரையே குடிக்க பயன்படுத்த வேண்டும்

வெதுவெதுப்பான தண்ணீரில் குழந்தைகளை இருவேளை குளிக்க வைக்க வேண்டும்

சுத்தமில்லாத ரோட்டோரக் கடை மற்றும் உணவகங்களை இது போன்ற சீசனில் தவிர்க்க வேண்டும்

வீட்டிலே சமைத்த உணவுகளை உண்பது பாதுகாப்பானது; ஆரோக்கியமானது

வீட்டுக்கு அருகில் மழை நீர் தேங்கி இருந்தால் அதை வெளியேற்றி விடுவது நல்லது

மாலை நேரங்களில் ஜன்னல் கதவுகளை சாத்தி கொசு வருவதை தடுக்க வேண்டும்