தூக்கமின்மை.. பல நோய்களின் அறிகுறி...!
இந்தியாவில் 30% மக்கள் 'இன்சோம்னியா' எனும் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுவதாகக் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக 30 வயதுக்கு மேல் உள்ள ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை வருகிறது.
தூக்கமின்மைக்கு முதல் காரணம் நாம் சரியான உடல் இயக்கம் இல்லாமல் இருப்பது.
விவசாயம், வீட்டு வேலை செய்பவர்கள் போல், உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களை பார்த்தால் அது புரியும், அவர்கள் படுத்தவுடன் தூங்கிவிடுவார்கள்.
மனஅழுத்தம், மன உளைச்சலுடன் இருந்தாலும் தூக்கம் வராது.
தூக்கம் வரவில்லை என அதிக நேரம் டிவி, மொபைல் பார்த்துக்கொண்டிருந்தாலும் பிரச்னைதான். அவை உங்கள் மூளையை அமைதியாக்கவிடாமல் தூக்கத்தை கெடுக்கும்.
தூக்கத்தின் அவசியத்தை உணர்ந்து யோகா, தியானம், நடைப்பயிற்சி போன்ற, வாழ்வியலை சிறப்பாக்கும் பயிற்சிகளை மேற்கொண்டால், ஆழ்ந்த உறக்கம் சாத்தியம்.