உடல் எடையை குறைக்கும் போது இதையெல்லாம் கவனத்தில் வையுங்க...
உடல் எடையை குறைக்க முயற்சி செய்வதற்கு முன், டாக்டரின் ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.
எடை குறைக்க வேண்டிய அவசியம் இருப்பவர்கள், என்ன மாதிரியான உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரிந்து பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொருவரின் உடல் தேவையும் மாறுபட்டது என்பதால், சமூக வலைதளங்களில் சொல்வதை அப்படியே செய்யக்கூடாது.
சரியான நேரத்திற்கு துாங்க வேண்டும். இது இல்லாமல், என்ன மாதிரியான உணவு முறைகள், உடற்பயிற்சியை பின்பற்றினாலும் பலன் இருக்காது.
அவரவர் உடலுக்கு ஏற்ற உணவைத் தேர்ந்தெடுத்து, சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.
ஒரு சிலருக்கு சிறுதானிய உணவுகள் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்; ஒத்துக்கொள்ளாது. எனவே உடல் எடை குறையும் என தொடர்ந்து அதை சாப்பிட்டால் வீண் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
உடற்பயிற்சி அவசியமானது. ஆனால், அதை குறிப்பிட்ட நேரத்தில் செய்தால் போதும். தினமும், 20 நிமிட நடை பயிற்சி, 5 நிமிட மூச்சு பயிற்சி, 10 நிமிடம் சூரிய நமஸ்காரம் செய்தால் போதுமானது.
கிழங்கு வகைகள், முட்டை, இறால், பேக்கரி வகைகள், துரித உணவுகள், குளிர்பானங்களை தவிர்க்கலாம்.
வெள்ளைப் பூசணி, பீர்க்கங்காய், இஞ்சி, கறிவேப்பிலை, கோவைக்காய், பப்பாளிக்காய், குடை மிளகாய், சுண்டைக்காய், ஆட்டு ஈரல் ஆகியவற்றை உணவில் சேர்க்க எடையை குறைக்க உதவும்.
செரிமான உறுப்புகளை சரிவர பாதுகாக்கச் செய்யும் சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், சீரகம் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.