எலும்பு வலுப்பெற... இந்த இட்லியை சாப்பிடுங்க!

ராகி அல்லது கேழ்வரகு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், இட்லி அரிசி - அரை கப், வெந்தயம் - ஒரு ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

ராகி அல்லது கேழ்வரகை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

உளுத்தம்பருப்பு, இட்லி அரிசி, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அலசி சுத்தம் செய்து, தண்ணீரில் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின், மிக்ஸி ஜார் அல்லது கிரைண்டரில் நன்றாக இட்லி மாவு பதத்துக்கு அரைத்து, தேவையானளவு உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும்.

இட்லி பாத்திரத்தில் எப்பொழுதும் போல் அளவாக ஊற்றி அவித்து எடுக்க வேண்டும்.

சாதாரணமாக இட்லி அவிக்க 10 நிமிடங்கள் ஆகும். ஆனால் ராகி இட்லியை 15 நிமிடங்களுக்கு நன்றாக வேக விட்டால் தான், மிருதுவாக இருக்கக்கூடும்.

இட்லி மட்டுமின்றி மொறு மொறு தோசையும் இதில் வார்க்கலாம்.

தொடர்ந்து இதை சாப்பிட எலும்பு தேய்மான பிரச்னை வராமல் தவிர்க்கலாம். உடலில் கால்சியம் சத்தையும் கட்டுக்குள் வைக்கலாம்.