நவராத்திரி ஸ்பெஷல்... எள் மற்றும் வேர்க்கடலை உருண்டை
தேவையான பொருட்கள்: எள் - ஒரு கப், ஆளி விதை - ஒரு டேபிள் ஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - கால் கப், வெல்லம் - 2 கப்.
எள் மற்றும் ஆளி விதை இரண்டையும் கடாயில் நன்றாக வறுக்கவும்.
அதேப்போல் வேர்க்கடலையையும் தனியாக வறுக்கவும்.
ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
பின், சம அளவு வெல்லம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
ஒரு தட்டில் அரைத்த கலவையை கொட்டி, சிறு சிறு உருண்டைகளாக கைகளால் பிடிக்கவும்.
இப்போது, சுவையான மற்றும் ஆரோக்கியமான எள் மற்றும் வேர்க்கடலை உருண்டை ரெடி.