குழந்தைகளின் பால் பற்களை பராமரிப்பது எப்படி?

ஆறு மாதம் முதல் குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைக்க துவங்கும். ஆறு வயதுக்கு மேல் அவை விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கும்.

பால் பற்களை தினமும் சுத்தமான ஈரத்துணியில் துடைக்க வேண்டும்.

பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அதிக சொத்தை ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றை கவனித்துக் கொள்ள வேண்டும்.

வாயில் இருந்து வெளியே துப்ப தெரிந்த பிறகு குழந்தைகளுக்கு பேஸ்ட் பயன்படுத்த வேண்டும்.

பற்பசையை பட்டாணி அளவில் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

ஆறு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ப்ளூரைடு நிறைந்த பற்பசைகளை பயன்படுத்த வேண்டும்.