இரண்டாம் குழந்தைக்கு எத்தனை ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும்?
மகப்பேறு சிகிச்சையில் சுகப்பிரசவம், சிசேரியன் என இரண்டு முறைகளில் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் இரண்டு சிகிச்சை முறையில் அதிகபடியான ரத்தம் தாய் உடலில் இருந்து வெளியேறுகிறது.
மேலும் 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலுாட்டும் காலமாகும். இக்காலங்களில் தாயின் உடலில் இருந்து குழந்தையின் உடலுக்கு சத்துக்கள் பரிமாறப்படும்.
இதில் தாயின் சராசரி உடல் நிலையில் இருந்த நுண்ணுாட்டச் சத்துக்கள் குறைந்து விடும். தற்போது பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியன் முறையில் நடக்கின்றன.
முதல் குழந்தை பிறந்த பின் மூன்றாவது ஆண்டில் அடுத்த குழந்தைக்கு கருவுற தயாரானால் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து தையல் போட்ட இடம் திறன் அதிகரித்து இருக்கும்.
இதனால் முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் 3 ஆண்டுகள் இடைவெளி மிக மிக அவசியம். இதனால் தாயின் உடலும் நன்றாக இருக்கும். ஆரோக்கியமான குழந்தை பிறக்கும என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக அறுவை சிகிச்சையின் போது ரத்தம் வெளியேறி ஹீமோகுளோபின் அளவு குறைந்து இருக்கும். 3 ஆண்டுகள் இடைவெளி இருக்கும்போது தாயின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்