மார்பகத்தில் தென்படும் கட்டி... அலட்சியம் கூடாது !
பொதுவாக 20 முதல் 40 வயதுள்ள பெண்கள் மார்பகத்தில் கட்டி ஏற்பட்டால் அதில் கவனம் செலுத்தாமல் விட்டு விடக்கூடாது.
மார்பகத்தில் உள்ள கட்டியில் வலி இருந்தால் அது மார்பக புற்றுநோய் இல்லை என தெரிந்து கொள்ளலாம்.
வலி இல்லாமல் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ கட்டியிருந்தால் அது மார்பக புற்றுநோய் பாதிப்பாக இருக்கும். எனவே, பெண்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மாதவிலக்கு முடிந்த 3 முதல் 5 நாட்கள் இந்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
மார்பக புற்றுநோய் வீட்டில் தாய், பாட்டி போன்றவர்களுக்கு இருந்தால் மிக கவனமாக இருக்க வேண்டும்.
ஏற்கனவே வலது புறம் பாதித்தவர்களுக்கு இடது புறம் வர வாய்ப்புள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை ஸ்கேன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.