கலர் கலரா இனிப்பு... உடலுக்கு பாதிப்பு தருமா?
ஒவ்வொரு நிறமியும் எந்தளவுக்கு சேர்க்கப்பட வேண்டும் என்ற அளவு உள்ளது.
ஒரு சில நிறமிகளை சேர்க்கவே கூடாது என்ற விதியும் உள்ளது. சராசரியாக, 100 பி.பி.எம்., வரை நிறமிகள் சேர்க்கலாம்.
அதிக நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளதை, அவற்றின் 'பளிச்' நிறத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இவற்றை தொடர்ந்து உட்கொள்வதால், வயிற்று உபாதைகள், அல்சர், அஜீரண கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.
அதிகளவில் பயன்படுத்தும் போது, புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேபோல், பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யில் செய்யப்படும் கார வகைகளை உட்கொள்வதால், உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்.
அது, மாரடைப்பு உள்ளிட்ட இருதய பாதிப்புகள் ஏற்பட காரணியாக அமையும்.