வீட்டிற்குள் செருப்பு அணிவது ஆரோக்கியமானதா?
வெளியில் சென்று விட்டு அதே செருப்புடன் வீட்டின் சமையலறை வரை செல்வார்கள். இதனால் வெளியிலிருந்து வீட்டிற்குள் பல நோய்கள் வருவதற்கு நாமே வழிவகை செய்வோம்.
அதனால் வீட்டிற்குள் பயன்படுத்துவதற்கு என்று தனியாக செருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த செருப்பை வீட்டை விட்டு எங்கேயும் எடுத்துச் செல்லக் கூடாது.
அதேபோல் வீட்டிற்குள் கழிவறை இருந்தால் அதற்குத் தனியாகச் செருப்பைப் பயன்படுத்த வேண்டும். அவற்றையும் வீட்டிற்குப் போட்டுக் கொண்டு நடக்கக் கூடாது.
நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் வெறுங்காலில் நடக்கும் போது புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் எப்போதும் செருப்பு பயன்படுத்துவது அவசியம்.
வீட்டின் தரைக்கு பெரும்பாலும் டைல்ஸ், மார்பிள்ஸ், கிராணைட் போன்றவற்றில் நடக்கும் போது தவறி விழ வாய்ப்புள்ளது.
பெரியவர்கள், சிறியவர்கள் செருப்பு அணிந்து நடக்கும் போது இதைத் தவிர்க்கலாம்.
சிலர் வீட்டிற்குள் தொடர்ச்சியாக நடக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள்.இதனால் அவர்களுக்குக் கால் வலி, பாத வலி ஏற்படும். செருப்பு அணிவதன் மூலம் இந்த தொந்தரவுகளைத் தடுக்கலாம்.